முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு முன்வைத்துள்ளது.
இதன்பொருட்டு சட்ட மாஅதிபரிடம் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
சட்ட மாஅதிபர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் பிரகாரம், தமது அமைச்சின் ஊடாக பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு, சத்தியக் கடதாசியொன்றை ரஞ்ஜன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு வழங்கியதன் பின்னர், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தமது அபிப்பராயமாகும் எனவும் அமைச்சர் விஜேதாச கூறுகின்றார்.
இதன் பிரகாரம், எதிர்வரும் சில தினங்களில் ரஞ்ஜன் ராமநாயக்க, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மேலும் தெரிவிக்கின்றார். (CeylonMail)

No comments:
Post a Comment