சீனாவால் இலங்கைக்கு வழங்கவதற்குத் தீர்மானித்துள்ள உதவித் திட்டத்தின் கீழ் ஒருதொகை மருந்துப் பொருட்கள் நாளை (03/06) நாட்டை வந்தடையும் என சீனா அறிவித்துள்ளது.
10 மில்லியன் யுவான் பெறுமதியுடைய 512,640 உயிர்காப்பு மருந்தான Enoxaparin Sodium தடுப்பூசிகளை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம், 256,320 தடுப்பூசி மருந்துகள் நாளை நள்ளிரவு நாட்டை வந்தடையவுள்ளதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மருந்துத் தொகை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் போதுமானது என்பதுடன், சீனாவால் இலங்கைக்கு வழங்கப்படும் 500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள முதல் கட்ட மருந்து தொகையாக இது அமைந்துள்ளது.
Media release: First Batch of China’s Grant Medicines Will Arrive on 3rd June
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 2, 2022
512,640 syringes of life-saving Enoxaparin Sodium Injection worth of 10 million RMB, the first batch of #China’s 500 mln RMB grant to #SriLankan people will be delivered via two consignments soon.
1/ pic.twitter.com/uOU2Wjcmo1

No comments:
Post a Comment