கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் நேர்மையாக பணியாற்றிய அரச ஊழியர்களை கெளரவிக்கும் "இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2021" விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று (11/01/2022) நடைபெற்றது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் அமைந்துள்ள BMICH மண்டபத்தில் இந்த விருது விழா நடைபெற்றது.
இலங்கையில் கோவிட் 19 தொற்றினால் மரணித்தவர்கள் மற்றும் நாட்டில் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த போராடி கடமையின் போது தமது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்த முன்கள அரச ஊழியர்களை நினைவு கூரும் வகையில் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது.
இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கும் செயற்பாடானது உலகளாவிய அமைப்பான Accountability lab எனும் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஓர் செயற்திட்டமாகும்.
இச்செயற்திட்டமானது மாற்றத்தை உருவாக்குபவர்கள் தமது சமூகத்தில் நேர்மையினை நிலைநிறுத்த அவசியமான சிறந்த யோசனைகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் ஆதரிக்கிறது. இவ் விருது வழங்கல் நிகழ்வானது தொடர்ச்சியாக 4ஆவது முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பின்வரும் அரச ஊழியர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான மகுடம் சூடும் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
- C. நிஷாரி அனுருத்திகா டி சில்வா, கிராம உத்தியோகத்தர் - தம்பதுர, சீதுவ
- Dr. ஹசித அத்தநாயக்க, பணிப்பாளர்- தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH)
- K.G கீதானந்த, ஆம்புலன்ஸ் சாரதி - பிரதேச வைத்தியசாலை, படபொல
- நிம்மி ஜயசேகர, தொற்றுத் தடுப்புப்பிரிவு தாதி உத்தியோகத்தர், மாவட்ட பொது வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய
- சண்முகராஜா சிவஸ்ரீ, பிரதேச செயலாளர் - தெல்லிப்பளை
அதேபோல் ,
- Dr. இந்திக எல்லாவல, பொது சுகாதார வைத்திய அதிகாரி - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிலியந்தலை
- Dr. பிரனீத் தும்மாதுர, மாவட்ட வைத்திய அதிகாரி - கறந்தெனிய மாவட்ட வைத்தியசாலை
- K.G.G.P.K. ரத்னாயக்க, பொது சுகாதாரப் பரிசோதகர் - பிரிவு 01, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கொழும்பு மாநகர சபை
- Dr. நிசாந்த பத்மலால் வெதகே, பொது சுகாதார வைத்திய அதிகாரி - சுகாதார வைத்திய அதிகாரிபணிமனை, உடுகம
- S.H அமீர், பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மூதூர்
ஆகியோர் முதல் பத்து இடங்களை பெற்றவர்கள் ஆவர்.
30 வருடங்களாக தனது நீண்ட பொதுச் சேவையில் பல பதவிகளில் சேவையாற்றிய விசேட ஆலோசக மருத்துவர் Dr. சரத் காமினி டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறுதி 10 வெற்றியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். (ceylonmail.lk)
No comments:
Post a Comment