நாட்டின் ஆழமுள்ள மற்றும் ஆழமற்ற கடற் பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை காலை 9 மணிவரையில் இந்த சிவப்பு எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த எச்சரிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற் பிரதேசங்களிலும், அரேபிய கடற் பிரதேசங்களிலும் அவதானமாக இருத்தல் அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்கம் இன்று காலை 8.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து 200 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (ceylonmail.lk)
No comments:
Post a Comment