ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக தமிழ் ஊடகவியலாளரான நியூஸ்பெஸ்ட்டின் செய்தி அறிவிப்பாளர், சென்சாய் ஜூடின் சிந்தூஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021/ 2022 காலப்பகுதிக்கான பதவி நிலையாக அவருக்கு கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஷிஹான். பி.எம். கீர்த்திகுமாரவினால், சென்சாய் ஜூடின் சிந்தூஜனுக்கு பதவி நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு கொழும்பு டொரிங்டனில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளர் சென்சாய் ஜூடின் சிந்தூஜன், நியூஸ்பெஸ்ட் சக்தி தொலைக்காட்சியின் பிரபல செய்தி அறிவிப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ceylonmail.lk)
No comments:
Post a Comment