Breaking

Saturday, November 20, 2021

கறுவாத்தோட்ட சர்வதேச உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீவிர விசாரணை


கொழும்பிலுள்ள புராதன கட்டடங்களில் ஒன்றான குதிரைப் பந்தய திடலின் பார்வையாளர் அரங்க கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் உணவகத்தில் இன்று (20) அதிகாலை திடீரென வெடிச் சத்தத்துடன் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பாக பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சர்வதேச நிறுவனமொன்றுக்குச் சொந்தமான குறித்த உணவகத்தில் இன்று அதிகாலை 5.30 அளவில் வெடிச் சத்தத்துடன் தீ அனர்த்தம் ஏற்பட்டது.


எரிவாயு கசிவினால் தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், தீயினால் உணவகம் அமைந்துள்ள கட்டட பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


ஆறு தீயணைப்பு சேவை வாகனங்கள் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


இந்த தீ அனர்த்தம் தொடர்பாக கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ceylonmail.lk)

No comments:

Post a Comment

Pages