Breaking

Saturday, November 20, 2021

#MenikeMageHithe புகழ் யொஹானிக்கு கிடைத்துள்ள பாராளுமன்ற அழைப்பு


புதிய தலைமுறைப் பாடகியான யொஹானி திலோகா டி சில்வாவைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 


பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார். 


இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 


சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.   


யொஹானி திலோகா டி சில்வா பாடிய Menike Mage Hithe பாடல் தற்பொழுது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ceylonmail.lk)


No comments:

Post a Comment

Pages