Breaking

Thursday, December 30, 2021

டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பில் பெண்களின் திறன்கள் பற்றிய ஆய்வறிக்கை வௌியீடு

டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான புரிதல், விழிப்புணர்வு மற்றும் சவால்கள் விடயங்களில் ஊவா மாகாண பெண்களின் திறன்கள் குறித்து ஊடகவியலாளர்களான கலாவர்ஷிணி கனகரட்ணம் மற்றும் சாரா பத்திரண ஆகியோர் ஆய்வறிக்கையை வௌியிட்டுள்ளனர்.


இன்டர்நியூஸ் ஸ்ரீலங்காவினால் நடத்தப்பட்ட 'பாதுகாப்பான சகோதரிகள்'  எனும் டிஜிட்டல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட பயிற்சியைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களான கலாவர்ஷ்னி கனகரட்ணம் மற்றும் சாரா பத்திரண ஆகியோர் 'டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சவால்கள் குறித்து ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆர்வலர்களின் திறன்களை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட ஆய்வை மேற்கொண்டனர். 


குறிப்பாக, பதுளையில் உள்ள பெண் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த மதிப்பீடு மூலம் டிஜிட்டல் பாதுகாப்பு  தொடர்பான புரிதல், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பல சவால்களை அடையாளம் கண்டுள்ளனர்.


இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மூன்று மொழிகளிலும் அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு பதுளையில் உள்ள ஊவா சக்தி அமைப்பின் தலைவர் சுரேஷ் நடேசனிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ceylonmail.lk)

No comments:

Post a Comment

Pages