இலங்கையில் தற்போது டெல்டா வைரஸின் மற்றுமொரு உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உப பிறழ்விற்கு B.1.617.2.104 எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உப டெல்டா பிறழ்வுகளின் எண்ணிக்கை இர்ணடாகும் என்பதுடன், அவை AY.28 மற்றும் AY.104 எனப் பெயரிடப்பட்டிருந்தன.
இதுதவிர இலங்கையில் இப்போது மூன்று SARS-CoV-2 வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இலங்கையில் தோற்றம்பெற்றவை என்பதுடன், முதலாவது B.411 என்ற பிறழ்வாகும். இது SARS-CoV-2 வைரஸின் பரம்பரையாகும் எனவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளார். (ceylonmail.lk)
No comments:
Post a Comment