Breaking

Saturday, September 25, 2021

மதுபான கடைகளால் சீரழியும் மலையகம்! (கட்டுரை)

இன்று தமது சொந்த அயராத உழைப்பாலும் கல்வியாலும் எழுந்து நிற்க போராடும் மலையகத்தின் ஒரு சரிவு பாதையாக மதுபான கடைகள் காணப்படுகின்றன.

மலையக மக்களை குறிவைத்து ஆங்காங்கே மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் இன்று வரையிலும் மலையகத்தில் மதுபான கடைகளின் திறப்பு விழாவிற்கு குறைவே இல்லை.

பெரும்பான்மையாக மலையக தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை வசதி தேவைக்காக ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் அதற்கான வசதிகள் மாத்திரம் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகின்றன. .இதனால் வயதானவர்கள் மாத்திரமன்றி இளைஞர் சமுதாயமும் போதைக்கு அடிமையாகி பாதை மாறிப் போகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டே இருக்கின்றதே ..

காலகாலமாக போதைப்பொருள் பாவனையால் மலையக தமிழ் மக்கள் பெரும் குடும்ப பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள் என்று நாம் பேசிக் கொண்டே இருந்தாலும், இந் நிலை மாறுவதாகவும் இல்லை .பொருளாதார குடும்பப் பிரச்சினை களையும் தாண்டி அதிகமாக முகம் சுளிக்க செய்கின்ற பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் முகம் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை இந்த குடிகார பிரியர்கள் ஏற்படுத்துகிறார்கள்.


பதுளையில் ஹொப்டன் எனும் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு லுணுகலை நகரத்திற்கு செல்வதே இலக்குஅத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக செல்லக் கூடியதாகவும், அருகில் இருப்பதும் லுணுகலை நகரம் தான். இந்த சிறிய நகர பகுதியிலும் மதுபான கடைகள் ஒன்றிரண்டு காணப்பட்டாலும் பஸ் தரிப்பிடத்திற்கு  அருகிலேயே  கள்ளுக்கடை உள்ளது. இங்கு வரும் கள்ளுத்தண்ணி பிரியர்களின் சாகசங்கள் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் முகம் சுளித்து விட்டுச் செல்லக்கூடிய அளவில் இவர்களில் சிலர் நடந்து கொள்வார்கள்.

சரியாக மாலை மூன்று நான்கு மணிக்கு இக்கள்ளுக்கடைகளுக்கு வரும் குடிகாரர்கள் வீடு போய் சேர கூடிய வகையில் ஒரு தனியார் பேருந்து ஐந்தரை மணியளவில் தயாராகி விடுகின்றன. பேருந்தில் மாலை நேர வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் பாடசாலை மாணவ மாணவிகள், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் நகரத்திற்கு வரும் பொது மக்களும் ஏறுவது வழக்கம். இவர்களில் பெரும்பான்மையாக இருப்பது கள்ளுத்தண்ணீர் பிரியர்களே.

அன்றொரு நாள் நானும் இப் பேருந்தில் மாட்டிக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பஸ் தரிப்பிடத்தில் பேருந்து இருப்பதைக் கண்டதும் ஓடிப்போய் பேருந்து நடுப்பகுதியில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டேன். மாலை நேரம் என்பதால் விரைவாக அடித்துப் பிடித்துக்கொண்டு ஆட்கள் பேருந்தில் ஏற ஆரம்பித்தனர். இவர்களில் ஒருவர் பேருந்தில் ஏறியதும்நான் குசினிக்கு செல்கிறேன் நமக்கு குசினிதான்  சரி என்றார்எனக்கு எதுவும் புரியவில்லை குசினியா? மனதில் சிரித்துக் கொண்டே பார்த்தேன்பிறகுதான் புரிந்தது அவர் குசினி என்று கூறியது பேருந்தின் பின்புறத்தில் இருக்கும் இறுதி இருக்கை என்று.

பேருந்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையினால் ஆட்கள் ஒருவரோடு ஒருவர் அடித்து பிடித்து நின்று கொண்டு வந்தார்கள். குடிகாரர்களுக்கு ஏற்ற விதத்தில் ஆரம்பகால பாடல்களை (பழைய பாடல்கள்) பேருந்தில் ஓடிக்கொண்டிருந்தது .சில குடிகாரர்கள் குடிபோதையில் தானும் சேர்ந்து ஒருவர் நிறுத்த ஒருவர் பாடிக் கொண்டு வந்தார்கள். பேருந்தில் மற்றொருவர் வரும் வழியில் உள்ள வணக்கஸ்தலம் ஒன்றைக் கண்டதும் எழுந்து வணங்குகிறார் உட்காருகிறார் மீண்டும் எழுந்து வணங்குகிறார் உட்காருகிறார்பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் மனதுக்கு என்னடா இது என்று சிந்திக்கத் தூண்டியது.

குடிகாரர்கள் சிலருக்கு புத்திமதி வேறு கூறிக் கொண்டே வருகின்றார்கள். அதிலும் சிலர் நன்றாக குடித்துவிட்டு போதையில் பக்கத்தில் உள்ளவர்கள் மீது சாய்ந்து சாய்ந்து விழுகிறார்கள்.

பேருந்தில் ஏறியவர்களின்   கதை சத்தம் ஒரு பக்கம் , பேருந்தில் ஒரு பக்கம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது, சிலர் பேருந்திலிருந்து ஏறி இறங்கிக் கொண்டிருக்க  இந்த குடிகாரர்களின் செயல்பாடுகள் என்ன என்று சொல்வது.

பொது இடங்களில் இவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வது கேவலமான செயற்பாடு களாகவே இருக்கின்றனஇவர்களை எல்லாம் எப்படி வழி நடத்துவது. மக்களுக்கு இவர்களது செயற்பாடுகள் எவ்வளவு ஒரு பிரச்சனையாக அருவருப்பாக இருக்கும்.

இப்படியாக பொது இடங்களில் நடக்கும் அருவருப்பான செயற்பாடுகளைத் தடுப்பதோடு நடந்து கொள்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுதலும் வேண்டும்.

 

.திஸ்னாகுமாரி

நான்காம் வருடம்

ஊடகக் கற்கைகள் துறை | யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

1 comment:

Pages